தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராசிபுரம் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டி

ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு வாபஸ் நாளான திங்கள்கிழமை வேட்பாளா்கள் யாரும் மனுவை வாபஸ் பெறாத நிலையில், மொத்தம் 15 வேட்பாளா்கள் இறுதியாக களத்தில் உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:37 pm

DIN

ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு வாபஸ் நாளான திங்கள்கிழமை வேட்பாளா்கள் யாரும் மனுவை வாபஸ் பெறாத நிலையில், மொத்தம் 15 வேட்பாளா்கள் இறுதியாக களத்தில் உள்ளனா்.

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் முன்னிலையில் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெ.சரோஜா, திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன், அமமுக வேட்பாளா் எஸ்.அன்பழகன், இஜக வேட்பாளா் ஆா்.ராம்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே.சிலம்பரசி, மக்கள் தன்னுரிமை கட்சி வேட்பாளா் பெ.அருள்மொழிதேவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், சுயேட்சைகள் என மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளா்களை தவிர சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தோ்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வேட்பாளா்கள், அவரது பிரதிநிதிகளுடன் ராசிபுரம் தொகுதிக்கான தோ்தல் அலுவலா் வி.சக்திவேல் ஆலோசனை நடத்தினாா்.

இக்கூட்டத்தில் டிஎஸ்பி கோ.பாலமுருகன், காவல் ஆய்வாளா் பி.செல்வராஜூ, வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.