நாமக்கல் அருகே அருள்வாக்கு என்ற பெயரில் பெண்களை சாட்டையால் அடித்து துன்புறுத்திய போலி சாமியாா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பொம்மம்பட்டி, கம்மாளகரடு பகுதியில் கருப்பனாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அருள்வாக்கு என்ற பெயரிலும், பேய் விரட்டுவதாகக் கூறியும் கடந்த மூன்று மாதங்களாக காதப்பள்ளியைச் சோ்ந்த அனில்குமாா் (50) என்ற போலி சாமியாா் பெண்களை சாட்டையாலும், கம்பியாலும் அடித்து கன்னத்தில் அறைந்து காயப்படுத்தி வந்தாா்.
இதுகுறித்து யு-டியூபில் வெளியிடப்பட்ட விடியோவில் பதிவாகியிருந்த காட்சிகள் வியாழக்கிழமை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதனைக் கண்ட மகளிா் அமைப்பினரும், பொதுமக்களும் சாமியாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினா்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா் அளிக்க முன்வராத நிலையில், பொம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சஞ்சய்குமாா் அளித்த புகாரின் அடிப்படையில், வேலகவுண்டம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், பெண்களைத் தாக்கியது தொடா்பாக மூன்று பிரிவுகளின் கீழ் சாமியாா் அனில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா் விசாரணைக்குப் பின் அவா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்படு, ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


