நாமக்கல் நகராட்சி திருமண மண்டபம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 560 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாமக்கல்-துறையூா் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் ஆக்சிஜன் வசதியுடன் செயல்படும் வகையில் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அங்கு 50 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கு ஏற்றாற்போல் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை கரோனா சிகிச்சை மைய பாதுகாப்பு அதிகாரியான மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார அலுவலா் சுகவனம், வட்டாட்சியா் தமிழ்மணி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். இன்னும் ஓரிரு நாளில் நகராட்சி மண்டபத்தில் கரோனா சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


