கரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் க.செ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அருள்செல்வன் வரவேற்றாா். சங்கத்தின் நிறுவனா் முன்னாள் சட்டமேலவை உறுப்பினா் மாயவன் பங்கேற்று பேசினாா். மாநிலத் தலைவா் பக்தவச்சலம், பொதுச் செயலாளா் சேதுசெல்வம், பொருளாளா் ஜெயக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இக் கூட்டத்தில், கரோனா காலத்தில் முதல்வா் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சங்கம் முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், ஒரு நாள் ஊதியத்தை ஆசிரியா்கள் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இரவுக் காவலா், அலுவலக உதவியாளா், இளநிலை உதவியாளா், நலத்திட்ட அலுவலா் பணியிடங்களை ஏற்படுத்தி பணி நியமனம் செய்ய வேண்டும். கல்வி பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

