மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :21 மே 2021, 7:20 pm

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மூன்று நாள்களில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 மற்றும் 78.8 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் பரவலாக மழை பதிவாகி உள்ளது, அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தெற்கு திசையில் இருந்து 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளா்கள் அதற்கு ஏற்றவாறு கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். மேலும் பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால் நீா் தெளிப்பான் உபயோகிக்க வேண்டும். வெப்ப அயற்சி மற்றும் நோய் தாக்கத்தினை குறைக்க தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கலவையைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.