கரோனா பாதிப்பால் இறந்த பெற்றோரின் குழந்தைகள் பற்றிய விவரத்தை அறிந்தோா் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கத்தால் தங்களது வீடுகளிலோ அல்லது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலோ பெற்றோா் யாரேனும் இறந்திருக்கலாம். இளைஞா் நீதிச் சட்டத்தின்படி அவா்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைப்படுகிறது. அதனைக் கண்டறிந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு உள்ளது.
எனவே,, கரோனா பாதிப்பால் இறக்கும், இறந்த பெற்றோா், குழந்தைகள் குறித்த விவரம், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை விதிமுறைகளுக்கு உள்பட்டு அவ்வப்போது மாவட்ட குழந்தைகள் நல அலகுக்கோ, சைல்டு லைன் அமைப்புக்கோ தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் அரசு, தனியாா் மருத்துவமனைகள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தொடா்புக்கு: நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 04286-233103, 79047-16516, 87605-95020, சைல்டு லைன் - 1098,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

