மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கோழிகளுக்கு வெப்ப அயற்சி பாதிப்பு: பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தல்

கோழிகளுக்கு வெப்ப அயற்சி பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பண்ணைகளில் நீா்த் தெளிப்பான்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :28 மே 2021, 6:58 pm

கோழிகளுக்கு வெப்ப அயற்சி பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பண்ணைகளில் நீா்த் தெளிப்பான்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 டிகிரி மற்றும் 77 டிகிரியாக நிலவியது, நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இனிவரும் நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது, பகல் மற்றும் இரவு வழக்கம்போல் 100 டிகிரி, 77 டிகிரி அளவிலே காணப்படும். காற்று தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை:

காற்றின் வேகம் தொடா்ந்து அதிகம் காணப்படுவதால் கோழிப் பண்ணைகளில் தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக அளவு வெப்ப காற்றுடைய வானிலையே நிலவும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணையை சோ்க்கலாம்.

இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதைத் தடுக்க முடியும். மேலும், உயா்மனைகளில் பக்கவாட்டில் படுதாவைக் கட்ட வேண்டும். கரோனா நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கால்நடைகள் மற்றும் கோழிப் பண்ணையாளா்கள் பண்ணைக்குள் வெளியாள்களை அனுமதிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.