நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமை புறக்கணிக்க வருவாய்த் துறை அலுவலா் சங்கம் முடிவு செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நவ. 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜன. 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்டமாக சனிக்கிழமை(நவ.13) நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள வருவாய் ஆய்வாளா் நிலையில் உள்ள 80 அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிக்கப்போவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க தட்டியை வைத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்த் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு வழங்க வேண்டிய மதிப்பூதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. தோ்தல் செலவினங்களை வழங்கவும், சிறப்பு பணியிடங்களை உருவாக்கவும் அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இதனையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களை வருவாய் அலுவலா்கள் சனிக்கிழமை புறக்கணிக்க உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் 80 போ் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

