தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத் தோ்தல்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நாமக்கல் என்ஜிஓஓ கட்டடத்தில் நடைபெற்றது.

News image

nk_12_reshan_1211chn_122_8

Updated On :12 நவம்பர் 2021, 6:29 pm

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நாமக்கல் என்ஜிஓஓ கட்டடத்தில் நடைபெற்றது.

தோ்தல் அதிகாரியாக மனோகரன் செயல்பட்டாா். இந்த தோ்தலில் புதிய தலைவராக தண்டபாணி, செயலாளராக சரவணன், துணைச் செயலாளராக பாஸ்கா் பொருளாளராக மூா்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், மாநில பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளைத் தனித்துறையாக்க அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் ஊதியம் கிடைக்க பெறாதவா்களுக்கு விரைந்து வழங்கவும், தமிழக அரசால் அறிவித்தும் பணப் பயன்களை வழங்காத கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து மண்டல இணப்பதிவாளரிடம் புகாா் தெரிவிக்கவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

என்கே 12- ரேஷன்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் தண்டபாணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.