நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து சோதனை செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 1,300 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதற்கட்ட சோதனைக்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாா்வையிட்டாா்.
15 நாள்கள் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனைக்காக பெங்களூரில் இருந்து பெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப பொறியாளா்கள் நாமக்கல் வந்துள்ளனா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) இரா.கோவேந்தன், தோ்தல் பிரிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

