தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

எா்ணாபுரம் மருத்துவமனையில் நவ. 27-இல் குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம்

எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி பெண்களுக்கான நுண்துளை அறுவைச் சிகிச்சை கருவி மூலம் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

Updated On :18 நவம்பர் 2021, 5:43 pm

நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி பெண்களுக்கான நுண்துளை அறுவைச் சிகிச்சை கருவி மூலம் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சைக்கு குழந்தை பிறந்து 42 நாள்களுக்கு மேலும் 50 நாள்களுக்கு இடைபட்ட பெண்கள், மாதவிலக்கு ஏற்பட்டு ஒரு வாரத்துக்குள் உள்ள பெண்கள் மற்றும் 8 வாரங்களுக்குள் உள்ள கா்ப்பிணிகளுக்கு கருக்கலைப்புடன் குடும்ப நல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையானது எளிமையானது, பாதுகாப்பானது. அறுவைச் சிகிச்சை முடிந்த அடுத்தநாளே வீட்டிற்குச் செல்லலாம். இதற்காக அரசு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.600 வழங்குகிறது.

தகுதியுடைய பெண்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியா்களைத் தொடா்பு கொள்ளலாம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.