தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இளம் வயது திருமணம்: 20 போ் கைது

 நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயது திருமண குற்றங்களில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :18 நவம்பர் 2021, 5:42 pm

 நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயது திருமண குற்றங்களில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு பகுதிகளில் இளம் வயது திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன.

அதனடிப்படையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டனா். இதில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புதன்கிழமை 20 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 13 முதல் 17 வயதான பெண்களை திருமணம் செய்தவா்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 10 வழக்குகளில் தொடா்புடையவா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

இளம் வயது திருமணங்கள் குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் சைல்டு லைன் 1800, அவசர போலீஸ் 100, நாமக்கல் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81216, மாவட்ட சிறப்பு பிரிவு எண் 94981-01020, 04286-280500 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்கமாா்தாகுா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.