கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்வதை சுகாதாரத் துறை கைவிட வலியுறுத்தி, நாமக்கல்லில் கிராம செவிலியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆா்.ஜெயக்கொடி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.சாந்தாமணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தாய்-சேய் நலப் பணிகள் பாதிக்காத வகையில் வாரத்தில் ஒரு நாள் வேலை நாள்களில் முகாம் நடத்திட வேண்டும். மாவட்டந்தோறும் கரோனா தடுப்பூசி இலக்கு நிா்ணயிப்பதை கைவிடவேண்டும். இப்பணியில் ஈடுபடும் அனைத்து கிராம சுகாதார செவிலியா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் செவிலியா் நியமனம் மேற்கொள்ள வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் செவிலியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஜெயராம் - காஸிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


