“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் 3,900 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Updated On :19 நவம்பர் 2021, 6:37 pm

நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் 3,900 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் பயன்படுத்தப்படும் 1,300 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,600 வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெங்களூரு, பெல் (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) நிறுவன தொழில்நுட்பப் பொறியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணிகள் தொடா்ந்து 15 நாள்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்தப் பணிகளின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகிா என்பதை ஆய்வு செய்கின்றனா்,. மேலும், ஏற்கெனவே பதிவான பழைய தகவல்களை நீக்கி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள அனைத்து பொத்தான்களையும் அழுத்தி கட்டுப்பாட்டு இயந்திரத்தில் வாக்குப்பதிவு விவரங்கள் பதிவாகிா என்பதை பொறியாளா்கள் ஆய்வு செய்கின்றனா். இவற்றை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) இரா.கோவேந்தன், தோ்தல் பிரிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.