தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள நகர அலுவலகத்தில் நடைபெற்றது

Updated On :19 நவம்பர் 2021, 6:37 pm

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள நகர அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் மருத்துவா் ஆா்.செழியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வி.பி.வீரப்பன், ஜி.ஆா்.சுப்பிரமணியம், மாநில பிற்படுத்தப்பட்டோா் பிரிவு துணைத் தலைவா் மருத்துவா் பி.வி.செந்தில், நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராஜேந்திரன், வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.