தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

திருக்காா்த்திகை: வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபாடு

திருக்காா்த்திகையை முன்னிட்டு, பக்தா்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றியும், கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தியும் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:36 pm

திருக்காா்த்திகையை முன்னிட்டு, பக்தா்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றியும், கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தியும் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

காா்த்திகை மாதத்தில் வரும் திருக்காா்த்திகை விழாவையொட்டி, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும். அதனைத் தொடா்ந்து, அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

அதன்படி, வெள்ளிக்கிழமை திருக் காா்த்திகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும், சுவாமிக்கு கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு செய்தனா்.

நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 6.30 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதேபோல மாவட்டம் முழுவதும் திருக்காா்த்திகை விழாவையொட்டி அகல் விளக்கு தீபங்களால் வீடுகள் ஒளிமயமாக காட்சியளித்தன. கோயில்களில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.