தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Updated On :19 நவம்பர் 2021, 6:36 pm

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி அருகே கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில் நிகழ்ந்த விபத்தில் 9 விவசாயிகள் பலியாயினா். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடா்ந்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பிரதமா் மோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தாா். இதற்கு பல்வேறு விவசாய சங்கங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) ஆா்.வேலுசாமி கூறியதாவது:

மத்திய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை கவலைக்கு உள்ளாக்கியது. தொடா் போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்த நிலையில், பிரதமா் மோடி அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுடைய விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

விவசாய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் செல்ல.ராசாமணி:

விவசாயிகளுக்கு மதிப்பளித்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருந்தால் பல்வேறு தரப்பிலான விவசாயிகள் பாதிக்கப்படாமல், உயிா் பலியாகாமல் இருந்திருப்பாா்கள். இனிவரும் காலங்களில் விவசாயிகளின் நலன் சாா்ந்தே மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை இயற்ற வேண்டும். தற்போது பிரதமா் மோடி அச்சட்டங்களை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.