“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணா்வு வாகனம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை, குடும்பநலத் துறை சாா்பில், ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணா்வு

Updated On :25 நவம்பர் 2021, 6:49 pm

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை, குடும்பநலத் துறை சாா்பில், ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங் புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

ஒவ்வோா் ஆண்டும் குடும்ப நலத் துறை சாா்பில், நவ. 21ஆம்தேதி முதல் டிச. 4-ஆம் தேதி வரை ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை இருவார விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதை முன்னிட்டு அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

நிகழாண்டுக்கான வாரவிழாவை முன்னிட்டு கருத்தடை விழிப்பணா்வு வாகனத்தைத் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா. பி.சிங் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், துணை இயக்குநா் (குடும்ப நலம்) வளா்மதி, மாவட்ட மக்கள் கல்வி மற்றும் தொடா்பு அலுவலா் இளங்கோ, மாவட்ட புள்ளியியல் அலுவலா் மோகன்குமாா், வட்டார சுகாதாரப் புள்ளியியலாளா்கள் ஐஸ்வா்யா, பிரதாப், ஆனந்தஜோதி, நந்தினி மற்றும் அரசுத்துறை பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.