தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

டாஸ்மாக் கடையை சேதப்படுத்த முயன்ற 4 போ் கைது

நாமக்கல்நாமக்கல்லில் அரசு மதுபானக் கடையை சேதப்படுத்த முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :25 நவம்பர் 2021, 6:48 pm

நாமக்கல்லில் அரசு மதுபானக் கடையை சேதப்படுத்த முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல்லில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், போலீஸாா் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு பின்புறம் நான்கு போ் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா்.

அவ்வழியாகச் சென்ற போலீஸாா் அவா்களை கண்காணித்தபோது, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மதுபானக் கடையை சேதப்படுத்தி பிரச்னையை உருவாக்க திட்டமிட்டதும், இதன்மூலம் தங்களை ரெளடிகள்போல் காட்டிக் கொண்டு பணம் பறிக்க முயற்சித்ததும் தெரியவந்தது.

இத்தகவல் காவல் ஆய்வாளா் வேலுதேவனுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆய்வாளா், போலீஸாா் நான்கு பேரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். இவா்கள், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த தமிழரசன்(23), பூபதிராஜா (22), சந்தோஷ்குமாா் (22), பிரதீபன் (30) என்பது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.