தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

எருமப்பட்டி ஒன்றியத்தில் நவ. 29-இல் தலைவா் தோ்தல்

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் வரும் திங்கள்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.

Updated On :25 நவம்பர் 2021, 6:47 pm

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் வரும் திங்கள்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், பாஜக, சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த அக். 22-ஆம் தேதி எருமப்பட்டி ஒன்றியக் குழு தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெற இருந்தபோது அதிமுக வாா்டு உறுப்பினா்கள் தோ்தலில் பங்கேற்க வராததால் அப்போதைக்கு தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே வரும் திங்கள்கிழமை தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலை நடத்த மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் எருமப்பட்டி ஒன்றிய 2-ஆவது வாா்டு உறுப்பினா் சுசீலா ராஜேந்திரன் அதிமுகவிலிருந்து விலகி வியாழக்கிழமை திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ராஜேஷ்குமாா் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டாா்.

தற்போது திமுக பலம் 6- ஆக உயா்ந்துள்ளது. தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக வாா்டு உறுப்பினா்களை பாதுகாக்கும் முயற்சியில் அக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.