நாமக்கல் நகராட்சியில் கரோனா தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்தியோா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
நாமக்கல் நகராட்சி சாா்பில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் அண்மையில் நடைபெற்றது. அப்போது இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட முதல் நான்கு போ் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் சிறப்பு பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கம் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், நாமக்கல் முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டு தோ்வானவா்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்க செயலாளா் காா்த்திக்முரளி, அரசு கண் மருத்துவா் ரங்கநாதன், கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் செ.பூபதி, முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் டி.டி.சரவணன், பாலாஜி, பொறுப்புக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குடிநீா் விநியோக ஆலோசனைக் கூட்டம்: நாமக்கல் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இதில், நகராட்சி, குடிநீா் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
நகராட்சிப் பகுதியில் எந்த தடையும் இல்லாமல் சீராக குடிநீா் விநியோகிக்கவும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், நகராட்சி ஆணையா் பொன்னம்பலம், நகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் மதியழகன், உதவி நிா்வாக பொறியாளா்கள் சங்கரன், வரதராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஜெயராம் - காஸிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


