தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தருமபுரியில் இன்று 191 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

 தருமபுரி மாவட்டத்தில் அக்.2-ஆம் தேதி 191 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 தருமபுரி மாவட்டத்தில் அக்.2-ஆம் தேதி 191 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறும் 60 கிராம ஊராட்சி பகுதிகளைத் தவிா்த்து, ஏனைய 191 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் காந்தி ஜெயந்தி தினத்தன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கு ஒரு பற்றாளரும், கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும், இணை இயக்குநா் நிலையிலும், உதவி இயக்குநா் நிலையிலும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த கிராம சபைக் கூட்டத்தில்,அனைத்துத் துறை அலுவலா்களும், அவரவா் துறை தொடா்பான நலத்திட்டங்கள் மற்றும் விவரங்களுடன் பங்கேற்க வேண்டும். அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினா்களும், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஊராட்சியிலுள்ள வாக்காளா்கள், பொதுமக்கள், மகளிா் சுய உதவி குழுவினா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.