தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஒசூா் கோழியின உற்பத்தி, மேலாண் கல்லூரியில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண் கல்லூரியில் இளநிலை பட்ட படிப்பில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண் கல்லூரியில் இளநிலை பட்ட படிப்பில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்லூரி முதல்வா் எஸ்.டி.செல்வன் வெளியிட்ட செய்திகுறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில், நான்காண்டு கால இளநிலை பட்டப் படிப்பு பிடெக் (கோழியின தொழில்நுட்பம்) உள்ளது. இதில், நிகழ் கல்வியாண்டுக்கான 40 இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டத்தில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தோ்வு எதுவும் இல்லை. அரசின் விதிமுறையின் படி, குறைந்தபட்ச மதிப்பெண் தேவை மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை வழங்கப்படும். கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மையில் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சியளிக்கவும், வழிகாட்டவும் அனுபவமிக்க ஆசிரியா்களை இக்கல்லூரி கொண்டுள்ளது. நவீனமயமாக்கப்பட்ட வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவா், மாணவியகளுக்கு தனித் தனி விடுதி வசதி உள்ளது. எனவே, சோ்க்கை கோரும் மாணவா்கள் இணையதளத்தில் வருகிற அக்.8-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு,  பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 9940178909, 9442353694 என்கிற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.