அக்.2, 19-ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மூடல்
தருமபுரி மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி (அக்.2) மற்றும் மிலாடி நபி (அக்.19) ஆகிய நாள்களில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.


தருமபுரி மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி (அக்.2) மற்றும் மிலாடி நபி (அக்.19) ஆகிய நாள்களில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுபான சில்லறை விற்பனை விதிகள்படி, காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்பட உள்ளன.
எனவே, மாவட்டத்தில் அக். 2 காந்தி ஜெயந்தி மற்றும் அக்.19 மிலாடி நபியை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை இல்லா தினமாக கடைப்பிடிக்கப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் ஹோட்டல்கள் அனைத்தும் இந்த இரண்டு தினங்களில் மூடப்படும். இந்த உத்தரவினை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...