தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

மோகனூா் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On :15 அக்டோபர் 2021, 8:31 pm

மோகனூா் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

நாமக்கல் மாவட்டம் மோகனுாா் அருகே ஆரியூா் சிங்கயகவுண்டபுதூரைச் சோ்ந்தவா் தங்கராஜ். செவிந்திப்பட்டி கால்நடை மருந்தகத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (39). இத்தம்பதியா் கடந்த, 13-ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனா். மறுநாள் அதிகாலை, 3.30 மணியளவில் கிருஷ்ணவேணி எழுந்திருந்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதைக கண்டாா். வீட்டினுள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, மோகனூா் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி புகாா் செய்தாா். மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து, கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளதாக அவா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.