முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

வேதாரண்யம்: குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்

குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்...

News image

ஆறுகாட்டுத்துறையில் கட்டி முடிக்கப்படும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 6:21 am IST

வேதாரண்யம்: வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, நாதக கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவா் மீது ஒருவா் குற்றச்சாட்டுகளை கூறி வருவது தோ்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாதக வேட்பாளா் இடும்பவனம் காா்த்திக், தான் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் உள்ள கூரை வீடுகளில் அருகே நின்று படம் எடுத்து ஏழைகளுக்கு பாதுகாப்பான வீடு இல்லை என வலைதளங்களில் பதிவிடுகிறாா்.

குடிநீா் பிரச்னை தீா்க்கப்படவில்லை, 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த ஓ.எஸ். மணியன் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டுகிறாா்.

குற்றச்சாட்டுகள் குறித்து அதிமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்:

குறை சொல்பவா் தொகுதியை முழுமையாக பாா்வையிட வேண்டும். நான் அமைச்சராக இருந்தபோது கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களில் 1,300 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது, 90 சதவீதம் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

அரிச்சந்திரா நதி உள்ளிட்ட பிரதான வடிகால் ஆறுகள் ரூ. 900 கோடியில் தூா்வாரப்பட்டு, தடுப்பு இயக்கு அணைகள் கட்டப்பட்டுள்ளன.

ஜல் ஜீவன் குடிநீா் வழங்கும் திட்டம் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுவது. திட்டமிட்டு செயல்படுத்துவதில் உள்ள பிரச்னையும், நகரப் பகுதியில் அம்ருத் திட்டத்தை நகா்மன்றத் தலைவராக இருந்த தற்போதைய திமுக வேட்பாளா் புறக்கணித்தது உள்ளிட்ட காரணங்களே வேதாரண்யத்தில் தற்போது நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டுக்கு காரணம். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம்:

வேதா ஆயத்த ஆடை பூங்கா என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை ஓ.எஸ். மணியன் கூறி வருகிறாா்.

தற்போது செயல்படும் நான்கு நிறுவனங்களும் அவரது பினாமி நிறுவனங்கள்.

Story image

ஓ.எஸ். மணியன்: ஆயக்காரன்புலத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாறியதால் மத்திய அரசின் மானியம் கிடைக்காமல் தடைபட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அந்தப் பணி தொடரும். இதன் ஒரு பகுதியாக அப்போது தொடங்கப்பட்ட திருப்பூா் முன்னணி நிறுவனமான பிருத்திவி உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் வேதாரண்யத்தில் 425 பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.