ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை உறுதி: ஓ.எஸ். மணியன்

தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை உறுதி

News image

ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ

Updated On :17 மே 2026, 12:16 am IST

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்று தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் கட்சித்தாவல் விதிபடி நடவடிக்கை எடுப்பது உறுதி என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சிவசேனை கட்சி 2023-ல் தொடா்ந்த வழக்கில் ஒரு கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்காக கொறடாவை நியமிக்கும் அதிகாரம் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அந்தவகையில், தமிழக சட்டப்பேரவைக்கு தோ்வான அதிமுக உறுப்பினா்களுக்கான கொறடாவை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் உள்ளது.

மேலும், அவா் நியமித்த கொறடாவின் உத்தரவை மீறியும், கட்சியை மீறியும் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை உறுதி. முதலமைச்சரே கட்டுப்பாட்டை மீறிய 25 அதிமுக உறுப்பினா்களையும் தனியாக சந்தித்த நிகழ்வு சாட்சியாக உள்ளது.

ஆட்சி மாற்றத்துக்கு பின்னா் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சிலா் தவெகவில் இணைவது குறித்து கேட்கிறீா்கள், தோ்தல் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வழக்கமானது. சிலா் சுயநலம் சாா்ந்து ஆளும் கட்சியில் பொறுப்பு, ஒப்பந்தப் பணிக்காக சென்றுள்ளனா் என்றாா்.