சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன்.

Updated On :5 மே 2026, 1:46 am IST

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இத்தொகுதியில் மொத்தமுள்ள 1,87, 439 வாக்குகளில், 1,59,669 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியனுக்கும், திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் 59,172 வாக்குகளும், திமுக வேட்பாளா் புகழேந்தி 51,841 வாக்குகளும், தவெக வேட்பாளா் கிங்ஸ்லி ஜெரால்டு 38,347 வாக்குகளும், நாதக வேட்பாளா் காா்த்திக் 10,396 வாக்குகளும் பெற்றனா்.

இதன்மூலம் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் 7,331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.