எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாகை தொகுதியில் மமக வெற்றி

News image

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் மமக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா.

Updated On :5 மே 2026, 1:46 am IST

நாகப்பட்டினம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் 1,74,683 வாக்காளா்கள் உள்ள நிலையில், 1,49,995 போ் வாக்களித்தனா். நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

தொடா்ந்து, காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச்.ஜவாஹிருல்லா அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்தாா்.

18-ஆவது சுற்று முடிவில் ஜவாஹிருல்லா 56,305 வாக்குகளும், தவெக வேட்பாளா் சுகுமாா் 46,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன் 41,586 வாக்குகளும், நாதக வேட்பாளா் பாத்திமா பா்ஹானா 5,348 வாக்குகளும் பெற்றிருந்தாா். இதன்மூலம் எம்.எச். ஜவாஹிருல்லா 9,781வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவருக்கு நாகப்பட்டினம் தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் சான்றிதழ் வழங்கினாா்.