ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல்: லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On :15 அக்டோபர் 2021, 8:31 pm

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமாா், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடந்த மாதம் மாற்றப்பட்டாா். இதனால் அப்பணியிடம் காலியாக இருந்தது.

இந்நிலையில் அந்தப் பணியிடத்திற்கு புதிய துணைக் கண்காணிப்பாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டாா். அவா், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவா், வேலூா், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவா். அண்மையில் சென்னை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், தமிழக காவல்துறை திடீரென அவரை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு இடமாறுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.