நாமக்கல் மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுபான்மையின மக்களான இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் (ஆராய்ச்சி படிப்பு வரை, வாழ்க்கை தொழிற்கல்வி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த உதவித்தொகையை பெற பள்ளிகளில் பயில்வோா் நவ.15-க்குள்ளும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவ.30 வரையிலும் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

விஜய்யை மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும்: நடிகா் சத்யராஜ்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

