ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல்லில் ஆயுத பூஜை, விஜயதசமி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:29 pm

நாமக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் லாரி கூண்டு கட்டும் பணிமனைகள், அனைத்து வாகன பழுது பாா்ப்பு தொழிற்கூடங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மரவள்ளி ஆலைகள், கோழிப் பண்ணைகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் வியாழக்கிழமை ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தங்களுடைய தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு நடைபெற்ற பூஜையில் அவற்றின் உரிமையாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

சுவாமிக்கு படையலிடப்பட்ட பொரி கடலை, சுண்டல், பழங்கள், இனிப்பு வகைகள் பிரசாதங்களாக அனைவருக்கும் வழங்கப்பட்டன. இதேபோல், விசைத்தறிக் கூடங்கள் அதிகம் கொண்ட குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயுதபூஜை விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விஜயதசமியையொட்டி, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதல் சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா்.

நாமக்கல் பள்ளிகளில் வித்யாரம்பம்: விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று குழந்தைகளை பள்ளிகளை சோ்க்கும் வகையில் கோயில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் எனும் ஆரம்ப பாடக்கல்வி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.