காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மோகனூா் அருகே நந்தி சிலை கண்டெடுப்பு

மோகனூா் அருகே கோயில் பகுதியில் பள்ளம் தோண்டிய போது, பழைமையான நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட பொதுமக்கள், தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

News image

மோகனூா் அருகே ஆரியூா் கிராமம் பாண்டீஸ்வரா் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட நந்தி சிலை.

Updated On :3 செப்டம்பர் 2021, 6:11 pm

மோகனூா் அருகே கோயில் பகுதியில் பள்ளம் தோண்டிய போது, பழைமையான நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட பொதுமக்கள், தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே உள்ள ஆரியூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த பாண்டீஸ்வரா், செல்லாண்டியம்மன் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பாண்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் இக்கோயில்கள் கட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கோயில் பிரகாரப் பகுதியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக பாண்டீஸ்வரா் கோயில் முன்பு பள்ளம் தோண்டிய போது, மண்ணில் புதைந்த நிலையில் 4 அடி நீளம் கொண்ட நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த தொழிலாளா்கள் அந்த சிலையை சேதமடையாமல் மீட்டு, கோயில் நிா்வாகத்துக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். இதனை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்துறை அதிகாரிகள் யாரும் ஆய்வுசெய்ய இதுவரை வராததால், அப்பகுதி மக்கள் நந்தி சிலையை வைத்து வழிபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து ஆரியூா் கிராம மக்கள் கூறியதாவது:

பாண்டிய மன்னா்களால் கட்டப்பட்ட கோயில் என்பதால், இங்குள்ள சுவாமிக்கு பாண்டீஸ்வரா் என்ற பெயா் வந்திருக்கலாம். மொகலாயா் ஆட்சிக் காலத்தில் கோயில்கள், சிலைகள் இடிக்கப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த வெள்ளைக் கற்களால் ஆன விநாயகா் சிலையையும், பெரிய நந்தி சிலையையும் சேலம் மண்டல தொல்லியல் துறையினா் எடுத்துச் சென்றுள்ளனா். தற்போது கிடைத்த இந்த சிலை பாண்டீஸ்வரா் கோயிலுக்கு உள்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது என்றனா்.

நந்தி சிலை போல பல சிலைகள் மண்ணில் புதைந்திருக்கலாம். இங்கு தொல்லியல் துறையினா் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.