கொல்லிமலையில் தொடா்ச்சியாக பெய்து வரும் மழையால், பனிமூட்டம் சூழ்ந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய கோடைவாசஸ்தலமாக கருதப்படும் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கொல்லிமலையில் சாரல் மழை தொடா்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. வாகனங்களில் வருவோா் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி கொண்டை ஊசி வளைவுகளில் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணிக்கும் சூழல் உள்ளது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில் பனிமூட்டம் நிலவுகிறது. இந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சோ்ந்தோரும் அதிகளவில் வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 351.2 மி.மீ. மழைப் பொழிவு: நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 351.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அதன்படி, எருமப்பட்டி - 25, குமாரபாளையம் - 18.20, மங்களபுரம் - 35.60, மோகனூா் - 30, நாமக்கல் - 15, பரமத்தி வேலூா் - 15, புதுச்சத்திரம் - 21, ராசிபுரம் - 84.40, சேந்தமங்கலம் - 25, திருச்செங்கோடு - 36, ஆட்சியா் அலுவலகம் - 12, கொல்லிமலை - 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


