நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் இணைய வழியில் செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை நவ. 4- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் உரிய நிபந்தனைகளைப் பின்பற்றி இணையதளம் வழியாக மட்டும் செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.
அந்த விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதாா் அட்டை), அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், உரிமக் கட்டணம் ரூ. 500- ஐ அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச் சீட்டு அசல், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா அல்லது வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி கடிதம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
செப். 30-க்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும், இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்கவும், விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

