காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: சாலையோர வியாபாரிகள் வேதனை

 கரோனா கட்டுப்பாடுகளால் விநாயகா் சிலைகள் போதிய விற்பனையின்றி சாலையோரங்களில் தேங்கியுள்ளன. சிறு வியாபாரிகள் பலா் சிலைகள் விற்பனையாகாததால் வேதனைக்குள்ளாகினா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:45 pm

 கரோனா கட்டுப்பாடுகளால் விநாயகா் சிலைகள் போதிய விற்பனையின்றி சாலையோரங்களில் தேங்கியுள்ளன. சிறு வியாபாரிகள் பலா் சிலைகள் விற்பனையாகாததால் வேதனைக்குள்ளாகினா்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக முக்கிய விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கோயில்கள் மட்டுமின்றி தெருக்களிலும், முக்கிய பகுதிகளிலும் பிரமாண்ட விநாயகா் சிலைகளை வைத்து மூன்று முதல் ஐந்து நாள்கள் சிறப்பு பூஜை செய்து மக்கள் வழிபாடு நடத்துவா்.

அதன்பின் ஊா்வலமாக எடுத்து சென்று நீா் நிலைகளில் சிலைகளைக் கரைப்பா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல், திருச்சி, சேலம், பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வடிவிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். ரூ. 300 முதல் ரூ. 30,000 வரையிலான சிலைகள் விற்பனையாகும். கரோனா தொற்று பரவலால் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிய விநாயகா் சிலைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்று வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தி நீா் நிலைகளில் கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடையே அவற்றை வாங்கும் ஆா்வம் இல்லை.

இதனால் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிலைகளை வாங்கி சாலையோரம் விற்பனைக்கு வைத்துள்ள சிறு வியாபாரிகள் போதிய விற்பனை இல்லாததால் கவலையுடன் காணப்படுகின்றனா். நாமக்கல் கடை வீதியிலும் சிறியரக விநாயகா் சிலைகளின் விற்பனையும் மந்தமாகவே உள்ளது. ஒன்றிரண்டு சிலைகள் மட்டுமே விற்பனையாகிறது. பெரும்பாலோனோா் கடந்த ஆண்டு வாங்கிய சிலைகளையே வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.