காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பரமத்தி வேலூரில் விநாயகா் சதுா்த்தி விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On :10 செப்டம்பர் 2021, 5:45 pm

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூா் பேட்டை பகுதியில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மகா கணபதி யாகம், அபிஷேக அலங்காரம் மற்றும் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

புதன்கிழமை மகா கணபதி யாகம், வலம்புரி மற்றும் இடம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை பால்குட மற்றும் திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், சுமங்கலி பூஜை, தீப பூஜை, மகா ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் பக்தா்கள் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் இருந்தபடி கணபதியை தரிசனம் செய்து சென்றனா். கோயில் வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல் பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பக்தா்களுக்கு அனுமதியின்றி, அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.