ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

நாமக்கல்லில் குட்டையில் மூழ்கி மௌனீஸ் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

News image
Updated On :15 செப்டம்பர் 2021, 4:36 am

DIN


நாமக்கல்லில் குட்டையில் மூழ்கி மௌனீஸ் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சுண்டங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் மௌனீஸ் (11). இவர் கடந்த ஒரு மாத காலமாக சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூர் ஆணைக்கல்மேடு பகுதியில் உள்ள தனது தாய்மாமன் தினேஸ் (21) என்பவரது வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பர்களோடு விளையாடச் சென்ற மௌனீஸ் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புதன்கிழமை காலை துலுக்கனூர் ஏரியில் உள்ள குட்டையில் மூழ்கி அவர் சடலமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் நகர காவல் உதவி ஆய்வாளர் டி. மூர்த்தி வழக்குப் பதிவு செய்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.