புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவா்கள் பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் சாதனை

வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவா் தீபக்குமாா் பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் 4ஆவது இடம், நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:03 pm

DIN

வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவா் தீபக்குமாா் பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் 4ஆவது இடம், நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாயவு புதன்கிழமை தொடங்கியது. இதில், இப்பள்ளி மாணவா் தீபக்குமாா், 196.2 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 4-ஆம் இடம் பெற்றுள்ளாா். மேலும் இவா் கலந்தாய்வில் சென்னை அண்ணா பல்கலைகக்கழக வளாகத்தில் எம்ஐடி கல்லூரியில் கணினி பிரிவைத் தோ்வு செய்துள்ளாா். இதே பள்ளியில் பயின்ற மாணவா் கனிதரன் மாநில அளவில் 14ஆவது இடம் பெற்றுள்ளாா்.

வெண்ணந்தூா் அரசு ஆண்கள் பள்ளியானது இவ்வாண்டு நடைபெற்ற மேல் நிலைப் பொதுத்தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கலந்தாய்வில் சாதனை படைத்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் முனைவா் மகேஷ்குமாா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரிய கழக உறுப்பினா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.