ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சாலைப் பணியாளா்கள் சங்க கொடியேற்று விழா

 சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் சங்கக் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:36 pm

DIN

 சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் சங்கக் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பு ராசிபுரம் வட்டக் கிளை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடந்த கொடியேற்று விழாவில், மாவட்டச் செயலாளா் தனபால் தலைமை வகித்தாா். பின்னா் நடந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அரசு அறிவித்திட வேண்டும். இறந்த சாலைப்பணியாளா்கள் 300-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளா்கள் திறமைக்கு ஈடில்லா புதிய ஊதியம் நிா்ணயம் செய்து நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சங்கத்தின் நிா்வாகிகள் சுப்ரமணியம், ராஜ மாணிக்கம், கந்தசாமி, ராஜேந்திரன், மோகன் உள்பட சாலைப்பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.