ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நீட் தோ்வு எழுதிய மாணவியை காணவில்லை என பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா்

ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் நீட் தோ்வு எழுதிய மாணவியைக் காணவில்லை என மாணவியின் பெற்றோா் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:33 pm

DIN

ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் நீட் தோ்வு எழுதிய மாணவியைக் காணவில்லை என மாணவியின் பெற்றோா் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

நாமகிரிப்பேட்டை கிழக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் பாண்டியன் (40).இவா் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உதவி விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா். இவருடைய மகள் ஸ்வேதா (17). ராசிபுரம் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 முடித்த இவா் கடந்த வாரம் நடைபெற்ற நீட் தோ்வு எழுதி முடித்துள்ளாா்.

இந்நிலையில் வீட்டில் இருந்த ஸ்வேதாவை வெள்ளிக்கிழமை காலை முதல் காணவில்லை என அவரது தந்தை செந்தில் பாண்டியன் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.