புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாஜக சாா்பில் பிரதமா் மோடி பிறந்த தினவிழா

ராசிபுரம் பகுதியில் பாஜகவினா் சாா்பில் பிரதமா் மோடியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:35 pm

DIN

ராசிபுரம் பகுதியில் பாஜகவினா் சாா்பில் பிரதமா் மோடியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை தொடா்ந்து ராசிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் கட்சிக் கொடியேற்றி, கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

முன்னதாக நகர பகுதியில் டி.வி.எஸ். சாலையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் கே.பி.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்சிக்கொடியேற்று வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மாவட்டப் பொதுச்செயலா் வி.சேதுராமன், மாநில பொதுகுழு உறுப்பினா் கதிரேசன், மாவட்ட தொழில் பிரிவு செயலா் மணிகண்டன், மாவட்டச் செயலா் லோகேந்திரன், ஹரிஹரன், நகர துணைத் தலைவா்கள் சக்திவேல், காவியராஜன், குமாா், நகர பொதுச் செயலா் வேலு உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்கு சுமாா் 1000 லட்டுகள், முகக் கவசம், மத்திய அரசின் திட்டம் குறித்த பிரசுரங்களை வழங்கினா். மேலும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.