நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மெட்டாலா லயோலா கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா லயோலா கல்லூரியில் மாணவ, மாணவியா்களுக்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா லயோலா கல்லூரியில் மாணவ, மாணவியா்களுக்கான வளாக வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பாக நடைபெற்ற இந்த முகாமில், பல முன்னனி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு இணைய வழியில் மாணவ-மாணவியருக்கு நோ்காணல் நடத்தின.

இந்த நோ்காணலில் கடந்த 2018 முதல் 2021ஆம் கல்வியாண்டுகளில் படித்த முன்னாள் மாணவ-மாணவியா் 53 போ் பங்கேற்றனா். இவா்களில் 41 மாணவ-மாணவியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியலை கல்லூரி முதல்வா் மரிய ஜோசப் மகாலிங்கம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தாா்.

இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 18,000 பெறுவாா்கள். ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். பணி வாய்ப்பு பெற்ற மாணவ மாணவியரை கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.