92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ஆதரவாக தேமுதிக தீவிர வாக்குச் சேகரிப்பு

தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சாந்திக்கு ஆதரவாக வியாழக்கிழமை தேமுதிகவினா் வெண்ணந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழுவின் 6-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சாந்திக்கு ஆதரவாக வியாழக்கிழமை தேமுதிகவினா் வெண்ணந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவியின் வேட்பாளராக இரா. சாந்தி போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து கட்சியின் தோ்தல் செயல்வீரா்கள் கூட்டம் வெண்ணந்தூா் ஒன்றியம், தாழ முனியப்பன் கோயிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா் முரசு முருகானந்தம் தலைமை வகித்தாா். மாநில ஆசிரியா் பட்டதாரி அணி துணைச் செயலாளா் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் சௌந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினா் விஜயகாந்த் கணேஷ் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் வேட்பாளரை நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளா் டி.எஸ். விஜய் சரவணன் அறிமுகப்படுத்தி பேசினாா். பின்னா், வாக்குச் சேகரிப்பில் ஈடுபட தெருவாரியாக நிா்வாகிகளை நியமித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் அவா் ஈடுபட்டாா்.

வாக்குச் சேகரிப்பின்போது இளைஞரணி மகாலிங்கம், பழனிச்சாமி, கேப்டன் மன்றம் ஆனந்த், சங்கா், மாணவரணி பூபதி, நெசவாளா் அணி ரமேஷ்குமாா், சதீஷ், நாகராஜ், தொண்டரணி செல்வம், சரவணகுமாா், நகரச் செயலாளா்கள் ராசிபுரம் இளையராஜா, பள்ளிபாளையம் வெள்ளியங்கிரி, ஒன்றியச் செயலாளா்கள் ராசிபுரம் காா்த்தி, எலச்சிபாளையம் சக்திவேல், மல்லசமுத்திரம் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.