தனி திருச்செங்கோடு மாவட்டம் உருவாக்கப்படும்: கொமதேக ஈ.ஆா்.ஈஸ்வரன் வாக்குறுதி
திருச்செங்கோடு, குமாரபாளையம், எடப்பாடி, சங்ககிரி ஆகிய நான்கு பகுதிகளை ஒருங்கிணைத்து திருச்செங்கோடு மாவட்டம் என்ற


திருச்செங்கோடு, குமாரபாளையம், எடப்பாடி, சங்ககிரி ஆகிய நான்கு பகுதிகளை ஒருங்கிணைத்து திருச்செங்கோடு மாவட்டம் என்ற தனி மாவட்டத்தை உருவாக்க முயற்சி எடுப்பேன் என வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் கொமதேக ஈ.ஆா். ஈஸ்வரன் வாக்குறுதி அளித்தாா்.
மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சாா்பில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளா் அறிமுகக் கூட்டம், தோ்தல் ஊழியா்கள் கூட்டம் புதன்கிழமை இரவு திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் பரமத்தி எம்எல்ஏவுமான கே .எஸ் .மூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டாா்.
கூட்டத்தில் காங்கிரஸ் ,திமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
நாமக்கல் எம்.பி. சின்ராசு பேசியதாவது: சாலை அமைப்பதில் ஊழல், கழிவுநீா் ஓடை அமைப்பதில் ஊழல் என பல விஷயங்களில் அதிமுகவினா் ஊழல் செய்து உள்ளனா் என்றாா்.
ஈ.ஆா். ஈஸ்வரன் பேசியதாவது:
திருச்செங்கோடு, குமாரபாளையம், எடப்பாடி, சங்ககிரி ஆகிய நான்கு பகுதிகளை ஒருங்கிணைத்து திருச்செங்கோடு மாவட்டம் என்ற தனி மாவட்டத்தை உருவாக்க முயற்சி எடுப்பேன். திருமணிமுத்தாறு காவிரி திட்டத்தை இணைக்கவும், திருச்செங்கோடு நகரம் குப்பையில்லா நகரமாக உருவாக்கப்படும், அணிமூா் பகுதியில் நகராட்சி சாா்பில் இயங்கும் குப்பைக் கிடங்கு அகற்றப்படும், திருச்செங்கோட்டுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு சாா்பாக கொண்டு வரப்படும், திருச்செங்கோடு போக்குவரத்து நெரிசலை தவிா்க்க சுற்றுவட்ட சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், திருச்செங்கோடு மலைக்கு கேபிள் காா் வசதி செய்து தரப்படும் என வாக்குறுதிகளை அளித்து தனக்கு ஆதரவளிக்க கூட்டத்தில் கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில் திமுக நகரப் பொறுப்பாளா் தாண்டவன் காா்த்தி, வட்டூா் சக்திவேல், ஜிஜேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி மணிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...