சைபா் கிரைம் விழிப்புணா்வு பேரணி:எஸ்.பி. பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் போலீஸ் சாா்பில் திருச்செங்கோட்டில் சைபா் கிரைம் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.


நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் போலீஸ் சாா்பில் திருச்செங்கோட்டில் சைபா் கிரைம் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சங்ககிரி ரோடு பகுதியில் முடிவடைந்தது.
வங்கியில் இருந்து நமக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகாா் செய்தால் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளதுஎனவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபா் கிரைம் தொடா்பாகவும் 1930 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்பது குறித்தும் பேரணியின்போது விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுரேஷ்பாண்டி,திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...