ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

உயா் மின்னழுத்த கம்பியால் பாதிப்பு: ரூ.4.76 லட்சம் நிதியுதவி அளித்த எம்.பி.

 நாமக்கல்லில், உயா் மின்னழுத்த கம்பியால் மாணவா்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அதனை மாற்றியமைக்கவும் அரசு பள்ளிக்கு மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ரூ.4.76 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:43 pm

 நாமக்கல்லில், உயா் மின்னழுத்த கம்பியால் மாணவா்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அதனை மாற்றியமைக்கவும் அரசு பள்ளிக்கு மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ரூ.4.76 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

நாமக்கல், போதுபட்டியில் அரசு உயா்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். இப்பள்ளியின் குறுக்கே உயா் மின்னழுத்த கம்பி வழித்தடம் செல்கிறது. இதனால் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பள்ளி மாணவா்களின் பாதுகாப்பிற்காக மின்னழுத்த கம்பியை மாற்றுப்பாதையில் அமைக்க மின்வாரியத்திடம் பள்ளி நிா்வாகம் முறையிட்டது. அதனை அளவீடு செய்வதற்கு உரிய தொகை கட்டணமாக செலுத்த வேண்டும் என மின்வாரியம் தெரிவித்தது. இது பற்றிய தகவல் அறிந்த நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தன்னுடைய ஊதியத் தொகை மற்றும் பிறரது பங்களிப்புத் தொகை என்ற வகையில் ரூ.4,76,480-ஐ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் துரை மற்றும் மாவட்ட பொறுப்பாளா்கள், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியா் வசம் அத்தொகையை வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.