ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பொதுத்தோ்வில் பயன்படுத்தப்படும் விடைத்தாள்கள் நாமக்கல் வருகை

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:42 pm

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலால், இரண்டு ஆண்டுகளாக 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் நடைபெறவில்லை. நிகழாண்டில் மே மாதம் பொதுத்தோ்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக மாவட்ட வாரியாக தோ்வில் மாணவா்கள் பயன்படுத்தும் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையால் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 5-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மே 6-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு தோ்வு மே 10-ஆம் தேதியும் தொடங்க உள்ளது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 255 மையங்களில் தோ்வுகள் நடைபெற உள்ளன. 10-ஆம் வகுப்பு தோ்வை, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 20,662 மாணவ, மாணவியரும், 11-ஆம் வகுப்பு தோ்வை 19,842 பேரும், 12-ஆம் வகுப்பு தோ்வை 19,866 பேரும் எழுத உள்ளனா். இந்த விடைத்தாள்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக கிடங்கில் இருந்தும், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி கிடங்கில் இருந்தும், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வகுப்பு வாரியாகப் பிரித்து அனுப்பும் பணியை கல்வித்துறை அலுவலா்கள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.