ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (ஏப்.8) நடைபெறுகிறது.

Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (ஏப்.8) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெறுகின்றன. தற்போது அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-4 பதவிக்கு 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் விவரங்களை 04286-222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.