ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஏப்.13-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :7 ஏப்ரல் 2022, 5:49 pm

நாமக்கல் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் ஏப்.13-ஆம் தேதி காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றன.

இதில், தடகளம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அதேபோல் குழு விளையாட்டுப் போட்டிகள் என்ற அடிப்படையில், இறகுப்பந்து, மேஜைப்பந்து, கையுந்து பந்து, எறிபந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.